தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளாக இருக்கும் நிலையில், அதை, தை மாதம் முதல் நாள் என்று மாற்ற முயற்சிக்கும் திமுக அரசின் நடவடிக்கை, தமிழக மக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழர்கள் காலம் காலமாக சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் நிலையில், அதை மாற்ற திமுக அரசு மறைமுக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
2022-ம் ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறை நாட்கள் பட்டியலில், சித்திரை மாதம் முதல் நாளான ஏப்ரல் 14ஆம் தேதி, தமிழ் புத்தாண்டு என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், நடைமுறையில் அதற்கு மாறாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு நியாய விலை கடைகளில் வழங்கவிருக்கும் பரிசுத் தொகுப்பு பையில், தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாங்கம் உள்ளிட்ட அனைத்திலும் சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக மக்கள் கொண்டாடி வரும் நிலையில், மக்களின் உணர்வுகளுக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு நாள் நவம்பர் ஒன்றாம் தேதி கடைபிடிக்கப்பட்டு வந்ததை, திமுக அரசு ஜூலை 18ஆம் தேதி என மாற்றியது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றை திரித்து கூறுவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக அரசு, தமிழ்நாடு நாளை தொடர்ந்து, தமிழ் புத்தாண்டிலும் அரசியல் செய்வதற்கு, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post