கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே டாக்டருக்கு படிக்காமல் பல ஆண்டுகளாக போலி மருத்துவம் பார்த்து வந்த திமுக பிரமுகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சங்கராபுரத்தை அடுத்துள்ள சோழம்பட்டில் திமுகவைச் சேர்ந்த சேட்டு என்பவர் போலி மருத்துவமனை நடத்தி வருவதாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மற்றும் மருத்துவ ஆய்வாளர் அடங்கிய குழுவினர் திமுக பிரமுகர் சேட்டு நடத்தி வரும் மருத்துவமனை மற்றும் மருந்துக் கடையில் சோதனை நடத்தினர். அதிகாரிகளின் சோதனையில் திமுக பிரமுகர் சேட்டு டாக்டருக்கு படிக்காமல் 15 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்ததும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.
திமுக பிரமுகரின் மருத்துவமனையில் கருக்கலைப்பு, ஊக்க மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மருந்துகளைக் அதிகாரிகள் கைப்பற்றினர். சுமார் 3 லட்ச ரூபாய் ரொக்கமும் அவரது மருத்துவமனையில் சிக்கியது. இதையடுத்து, போலி மருத்துவம் பார்த்து வந்த திமுக பிரமுகரின் மருந்துக் கடை மற்றும் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தப்பி ஓடி தலைமறைவான திமுக பிரமுகர் சேட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர். டாக்டருக்கு படிக்காமல் போலி மருத்துவம் பார்த்து வந்த சேட்டு, சங்கராபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. உதயசூரியனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post