பரபரப்பான சூழலில் திமுகவின் செயற்குழு கூடி உள்ளது.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி, கடந்த கடந்த 7 ஆம் தேதி காலமானார். இந்நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக, திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறுது.  இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், 62 மாவட்ட பொறுப்பாளர்கள்,  நாடாளுமன்ற  மற்றும் சட்டப்பேரவை  உறுப்பினர்கள் உள்பட 1500க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் முதல் நிகழ்வாக, மறைந்த கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.  திமுகவின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் எதிர்பரா்க்கப்படுகிறது.
 
Exit mobile version