வேலூரில் ஆட்கள் இன்றி வெறிச்சோடிய திமுக தேர்தல் பிரசாரம்

வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரசாரத்தின் போது ஆட்கள் கூடாததால் தேல்வி உறுதியாகியுள்ளதாக அப்பகுதியினர் முணுமுணுத்தவாறு சென்றனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் மேற்கொண்ட கூட்டத்தில், ஆட்கள் இல்லாத நிலையில், குழந்தைகளை சேர்த்து பிரச்சாரம் செய்தார். அப்போது, ஆபத்தான நிலையில் பட்டாசுகளை கொளுத்தியும் திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பட்டாசு தீ ஒன்று, அருகில் உள்ள மாடி ஒன்றில் தீ பற்றியதை அடுத்து, உடனடியாக தீ அணைக்கப்பட்டது. அப்போது திமுக நிர்வாகி ஒருவர் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version