தமிழர்களின் மானம் காப்போம் என்று விளம்பரம் செய்து வரும் திமுக, இலங்கையில் தமிழர்கள் பட்டினி மற்றும் ஆடை இன்றி இருந்த போது மானம் காக்கவில்லை என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், தமிழர்களின் மானம் காக்க அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.