சென்னை காசிமேட்டில் செக் மோசடி வழக்கில் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை ராயபுரம் எம். எஸ். கோவில் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் என்பவரிடம் காசிமேடு சிங்கர வேலர் நகர் பகுதியை சேர்ந்த 43 வது வட்ட திமுக செயலாளர் முத்தழகன் 3 லட்ச ரூபாயை கடனாக பெற்றுள்ளார். பல மாதங்கள் ஆகியும் பணத்தை திருப்பி தர முத்தமிழன் மறுத்து வந்துள்ளதாக குற்றச்சாட்டப்படுகிறது.
இந்தநிலையில், பரந்தாமனுக்கு மூணு லட்ச ரூபாய் வங்கி காசோலையை வழங்கியுள்ளார். காசோலை வங்கியில் கொடுத்தபோது முத்தழகன் வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது. இதனையடுத்து, வங்கியில் பணம் இல்லாமல் மோசடி செய்த திமுக பிரமுகர் முத்தழகன் மீது பரந்தாமன் ஜார்ஜ் டவுன் விரைவு நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில் செக் மோசடி செய்தது உண்மை என தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த முத்தழகனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர், முத்தமிழனை புழல் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post