நாங்கள் ஆட்சி வந்தால்… குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, கேஸ் சிலிண்டருக்கு மானியம், உங்க வீட்டுக்காரர்கள் வாங்கும் சம்பளத்தை டாஸ்மாக்கிலே கொடுத்துவிட்டு போனாலும் உங்கள் வீட்டில் அடுப்பெரிய நாங்கள் பொறுப்பு என்று கதறிக்கதறி ஓட்டு வாங்கிய திமுகவின் பொய் வாக்குறுதிகள் அனைத்தும் முதல் சட்டமன்ற தொடரிலேயே அம்பலமாகின.
மாணவ கண்மணிகளே! நீங்கள் பள்ளி பாடம் மட்டும் படியுங்கள் ’நீட் இல்லாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று கூறிய நல்ல வாய்கள் ஆட்சிக்கு வந்ததும் ’நீட்டிற்கு தயாராகுங்கள்’ என நீட்டி முழக்கும் நார வாய்களாகி விட்டன.
வாகன ஓட்டிகளே எங்களுக்கு ஓட்டு போடுங்கள் பெட்ரோல் விலையை குறைப்போம் டீசல் வலையை மிதிபோம் என்று சொன்ன திமுக ’தேதி போட்டாங்களா?’ என்று குரைக்குறது
கொடுத்த வாக்குறுதிகள் எல்லாமே ’அது போன மாசம்; இது இந்தமாசம்’ங்கற கைப்புள்ள கதையாகிப் போக, நம்பி ஓட்டு போட்ட நாம அடி வாங்குற கைபுள்ளையா? இல்ல அடிக் கொடுக்குற கைப்புள்ளையானு மக்கள் குழப்பத்துல இருக்க, செய்யறதா சொன்ன தேர்தல் வாக்குறுதிகள் வெறும் ஓட்டுக்காகதானோ? என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக இருக்க… என்ன ஆகப் போகிறதோ நம் நிலைமை? என்பதே நம் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது
Discussion about this post