பஞ்ச பூதங்களில் ஊழல் செய்த கட்சி திமுக: நடிகை விந்தியா

பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்த கட்சி திமுக என்று நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முனியாண்டியை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், உப்பு போட்ட வீட்டிற்கு தப்பு செய்தவர் தினகரன் என்று குற்றம் சாட்டினார். திருட்டு திமுகவையும், அமமுகவையும் மக்கள் இந்த தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அண்ணா மறைவுக்கு பின்னர் எம்.ஜி.ஆர். உதவியால்தான் கருணாநிதி முதலமைச்சர் ஆனார் என்றும் அவர் குறிப்பிட்டார்

Exit mobile version