தி.மு.க. அமைக்கிற கூட்டணி பூஜ்ஜிய கூட்டணி என்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அமைக்கிற கூட்டணி ராஜ்ய கூட்டணி என்றும் வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை அடுத்த கேடிசி நகரில் அம்மா பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமையேற்று பேசிய அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தி.மு.க. அமைக்கிற கூட்டணி பூஜ்ய கூட்டணி என்றும் அ.தி.மு.க. கூட்டணி ராஜ்ஜியம் அமைக்கிற கூட்டணி என்றும் கூறினார்.
அதிகமான மக்கள் நலத்திட்டங்களை வழங்கியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று புகழாராம் சூட்டிய அமைச்சர், விரைவில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, நாடாளுமன்ற தேர்தலில் வியூகம் அமைத்து அ.தி.மு.க. போட்டியிடும் என்றும் இந்திய பிரதமரை தேர்வு செய்யும் கட்சியாக அ.தி.மு.க. விளங்கும் என்றும் குறிப்பிட்டார்.