திமுகவின் அத்தியாயம் இந்த தேர்தலோடு முடிந்துவிடும்: ராமதாஸ்

திமுகவின் அத்தியாயம் இந்த தேர்தலோடு முடிந்து விடும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வேட்பாளர் ஜெயவர்தன், எந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர் என்றார்.

பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் 300 சீட்டுகள் வரை பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் 75 சீட்தான் பெறும் என்றும் கூறினார். திமுகவின் அத்தியாயம் இந்த தேர்தலோடு முடிந்து விடும் என்றும் அதன் தலைவர் ஸ்டாலின்தான் அதனை முடித்து வைக்கப்போவதாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.

Exit mobile version