அரசியலில் தந்தையின் பின்புலத்தால் உயர்ந்த ஸ்டாலினால், உழைக்கும் மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பல்லடம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுகவில் உயர்ந்து பதவிக்கு வந்த அனைவரும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் என்றார். தந்தையின் பின்புலத்தால் ஸ்டாலின் உயர்ந்த பதவிக்கு வர முடிந்ததாக முதலமைச்சர் விமர்சித்தார். உழைக்கும் மக்களின் பிரச்னைகளை ஸ்டாலினால் புரிந்த கொள்ள முடியாது என்றும் நாட்டு நடப்புகள் கூட ஸ்டாலினுக்கு தெரியாது என்றும் முதலமைச்சர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், அதிமுக அரசு மீது தவறை கண்டுபிடிக்க முடியாததால், ஸ்டாலின் வெற்று அறிக்கைகள் மூலம் ஊழல் புகார்களை தெரிவிப்பதாக சாட்டினார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்க தயாரா? என்றும் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சவால் விடுத்தார்.
Discussion about this post