திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு வியர்வை துடைப்பதிலேயே ஆர்வத்துடன் இருந்த கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளரின் செயல் காண்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் பஸ் நிலையப் பகுதியில் திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போது அருகே நின்று கொண்டிருந்த வேட்பாளர் கவுதம் சிகாமணி, உதயநிதிக்கு வியர்வையை துடைத்து விடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்.
இது காண்பவர்களை முகம் சுழிக்க வைத்தது. வெற்றி பெறும் முன்னரே இப்படி வாரிசுகளின் மனதில் இடம் பிடிக்க போட்டி போடும் இவர் ,வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன நல்லது செய்வார்? என கேள்வி எழுப்பினர்.
Discussion about this post