மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் மக்களுக்கு பணம் கொடுக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் குறுக்கு வழியில் சென்றாவது வெற்றி பெறவேண்டும் என்ற நோக்குடன், திமுகவினர் வாக்களர்களுக்கு பணம் விநியோகம் செய்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் 17-வது வார்டுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் வேட்டையன், ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணம் வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.
வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில், இவருக்கு ஆரத்தி எடுக்கும் ஒரு பெண்ணுக்கு, வேட்டையன் பணம் வழங்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதேபோல், தேனியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post