மதுரையில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிடாமல் திமுக கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பிலேயே கவனமாக இருந்தது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
மதுரை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன், மேலூர் அழகர் கோயில் சாலையில் வாக்கு சேகரித்தார். அப்போது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று, செல்வதற்கு வழி இல்லாமல் நின்று விட்டது. இதனைப் பொருட்படுத்தாத வேட்பாளர் வெங்கடேசன், தொடர்ந்து வாக்கு சேகரிப்பிலேயே கவனம் செலுத்தினார். வெங்கடேசனின் செய்கையைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
அது மட்டுமின்றி சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த தாய்மார்கள், குழந்தைகள் கடும் வேதனை அடைந்தனர். அங்கு வந்த வேட்பாளர் வெங்கடேசனை முற்றுகையிட்ட அவர்கள், பல்வேறு வினாக்களை எழுப்பினர். உரிய பதிலளிக்க முடியாது திக்குமுக்காடிப்போனார் வெங்கடேசன்.