நெல்லையில் மாடுகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து திமுகவினர் பிரசார கூட்டம் நடத்தியது பொது மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர் அருகே உள்ள வாசுதேவநல்லூரில் தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தனுஷை ஆதரித்து வாகை சந்திரசேகர் தலைமையில் பிரசார கூட்டம் நடந்தது. இந்த பிரசார மேடையை மேய்ச்சலுக்கு சென்று வரும் மாடுகளின் வழித்தடத்தில் அமைத்ததால் அந்த வழியாக வந்த மாடுகள் பரிதவிப்பிற்கு ஆளாகின.
வாகை சந்திரசேகர் பேசுவதற்கு முன்பாகவே பொதுமக்கள் கலைந்து சென்றதால் சலசப்பு ஏற்பட்டது. மக்கள் ஆதரவு இல்லாதது, கூட்டணி கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.