காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம், திருப்போரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொது செயலாளர் வைகோ திருப்போரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவ்வழியே வந்த ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டது. மேலும் வைகோ பேசும்போது பெண்கள் எழுந்து சென்றதால் நாற்காலிகள் காலியாக இருந்தன.
Discussion about this post