திண்டுக்கல்லில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி நியாய விலைக் கடைகளில் பேனர் வைத்த திமுகவினரின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கொரோனா நிவாரண நிதியாக 2 ஆயிரம் ரூபாய் நியாய விலை கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நியாயவிலை கடைகள் முன்பு ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், சின்னாளப்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் ஆளும்கட்சியினர், தலைவர்களின் புகைப்படங்களோடு கூடிய பேனர்களை வைத்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆளும் கட்சியினர் பேனர்களை அகற்றாமல் இருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post