கன்னியாகுமரி மாவட்டம் வீரவநல்லூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து 4 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மிருகத்தனமான செயல்கள் மூலம் திமுக ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது என்று குற்றம் சாட்டியதுடன், தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post