ஈரோடு கிழக்கில் திமுகவினர் அராஜத்தில் ஈடுபட்டு வருவதனை கண்டித்து அவர்கள் மீது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் அளித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி திமுகவினர் செய்யும் அளப்பறைக்கு அளவே இல்லை. அவர்கள் ஒட்டகத்தில் போவது, டீ போடுவது, புரோட்டா மற்றும் போண்டா போடுவது போன்ற கோமாளித்தனமான செயல்களில் ஈடுபட்டு வாக்காளரை கவரும் விதமாக நகைச்சுவை செய்துகொண்டு இருக்கிறார்கள். இதில் உச்சக்கட்டம் என்பது ஒட்டகத்தின் மீது சவாரி செய்ததுதான். விலங்கின பாதுகாப்பு சட்டம்படி இப்படி அவர்கள் செய்வது மிகப்பெரிய தவறு. வாக்காளர்களை அடைத்து வைத்தல் ஜனநாயக அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள். வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கழித்த விவகாரத்தில் அந்த ஊருக்கு சென்று ஸ்டாலின் பார்வையிடக் கூட இல்லை என்று குற்றம் சாட்டினார்.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் விரிவான கருத்துக்களை கீழே உள்ள காணொளியினை சொடுக்கி பார்க்கவும்!