தேர்தல் முன்விரோதம் காரணமாக ராணிப்பேட்டை அருகே அதிமுக நிர்வாகியை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் உருட்டுக்கட்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டையை அடுத்த அக்ராவரத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அண்ணா தொழிற்சங்க செயலாளராக உள்ளார். மக்களவை தேர்தல் பணியின்போது, இவருக்கும் திமுக மற்றும் காங்கிரசை சேர்ந்த சகோதரர்கள், முருகன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதை மனதில் வைத்து தெய்வசிகாமணியை அவர்கள் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெய்வசிகாமணி, சிப்காட் காவல்நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், பாஸ்கர் மற்றும் அவரது மகன்கள் உருட்டுக்கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் தெய்வசிகாமணி மற்றும் அவரது நண்பரை தாக்கினர். இதில் பலத்த அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.