காஞ்சிபுரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தல் விதிமுறை மீறல்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியதில் திமுகவினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர். பாலு குன்றத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றும், பட்டாசு கொளுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி திமுகவினர், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.

சில இடங்களில் கூட்டணி கட்சி கொடிகள் இல்லாது திமுகவின் கொடிகள் மட்டுமே இருந்தது கூட்டணி கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

Exit mobile version