திருப்பரங்குன்றத்தில், தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்வதற்கு திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் ஆய்வு செய்யாமலேயே திரும்பிச் சென்றுள்ளனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே திமுக கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் அறிமுக விழா நடைபெற்றது. இந்த கூட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர், கூட்டம் நடந்த திருமண மண்டபத்திற்கு சென்றனர். இதற்கு திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் வெளியேறினர்.
தேர்தல் பறக்கும் படையினரின் ஆய்வுக்கு ஒத்துழைக்காமல் விதிமுறைகளை மீறும் வகையில் திமுக கூட்டணி கட்சியினர் நடந்து கொண்டுள்ளனர்.
Discussion about this post