அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சங்கனூர் பகுதியில் பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனை ஆதரித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கோவையில் அனைவருக்கும் வீடு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.
மேலும் தமிழகத்தில் காங்கிரசை ஆதரிக்கும் கம்யூனிஸ்டுகள் கேரளாவில் காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்வதையும் குறிப்பிட்டார். திமுக கூட்டணியில் 20 பிரதமர் வேட்பாளர்கள் உள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
Discussion about this post