திமுக கூட்டணியில் இடம்பெற்றதாக கருதப்பட்ட மனிதநேய மக்கள் கட்சிக்கு சீட் இல்லை என திமுக அறிவித்தது மமக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக ஏற்கனவே திமுக அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், சிபிஐ ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றதாக கருதப்பட்ட மனிதநேய மக்கள் கட்சிக்கு, சீட் இல்லை என திமுக திடீரென அறிவித்ததால் அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post