வேளாண் சட்டங்களை எதிர்த்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, தொண்டர் ஒருவரை பார்த்து, `அந்த நாயை தூக்கி வெளியே போடு’ என்று ஆவேசமாகத் திட்டினார்.
துணை பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பின் கலந்து கொண்ட முதல் கூட்டத்திலேயே கட்சித் தொண்டரை தரைக்குறைவாகப் பேசிய ஆ.ராசாவின் செயல் தி.மு.க. தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
Discussion about this post