நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில், தீபாவளி பண்டிகை எதிரொலியாக மல்லிகை பூ விலை ஆயிரத்து 200 முதல் ஆயிரத்து 500 ரூபாயை தொட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூமார்க்கெட் பகுதியில், அதிகப்படியான மல்லிகைபூக்கள் விளைவிக்கப்பட்டு, வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது, வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள கொடைரோடு, சிலுக்குவார்பட்டி, விளாம்பட்டி, நிலக்கோட்டை, வத்தலகுண்டு, ஆகிய பகுதிகளில் அதிகளவில் பூ விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 400 ரூபாய் முதல் 600 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ, தீபாவளி பண்டிகை எதிரொலியாக, தற்போது ஆயிரத்து 200 முதல் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post