ஒடிசாவை தாக்கிய டிட்லி புயல் – 3 லட்சம் பேர் வெளியேற்றம்

ஒடிசாவை தாக்கிய டிட்லி புயல் – 3 லட்சம் பேர் வெளியேற்றம்

ஒடிசாவை தாக்கிய டிட்லி புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வங்கக் கடலில் அதி தீவிர புயலாக நிலை கொண்டிருந்த டிட்லி புயல், தெற்கு ஒடிசா – ஆந்திரா இடையே இன்று காலை கரையை கடந்தது. கஞ்ஜம், பூரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வசிக்கும் மூன்று லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மணிக்கு 149 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வரும் சூறைக் காற்றால், மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. புயல் கரையை கடந்ததை தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. புயல் தாக்கியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புயல், கனமழை பாதிப்பை எதிர்கொள்ள மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். பேருந்து, ரயில், விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்ததை தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

Exit mobile version