பெரிய காஞ்சிபுரம் அருகே உள்ள இறைச்சி கடைகளில் மாவட்ட நகராட்சி ஆணையர் மகேந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பெரிய காஞ்சிபுரம் செங்கழு நீரோடைக்கு அருகில் உள்ள தர்கா பகுதியில் இறைச்சிக் கடைகள் அதிகமாக செயல்பட்டுவருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பெரும்பாலானோர் இங்கே வந்து இறைச்சியை வாங்கி செல்வது வழக்கம். இந்தநிலையில், கடைகளில் சுத்தம் இல்லாமல் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நகராட்சி ஆணையர் மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையர் மகேந்திரன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இறைச்சி கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Discussion about this post