கரூரில் தனியார் அகாடமி சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். கரூர் தனியார் அகாடமி பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பொதுப்பிரிவினருக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை நடத்தியது. ஏராளமான மாணவ மாணவியர் சதுரங்கப் போட்டியில் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பள்ளி சிறுமியுடன் சதுரங்கம் விளையாடி போட்டிகளை துவங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Discussion about this post