பொங்கல் சிறப்பு தொகுப்பு அனைத்து பயனாளிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூர் மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த தகுதி பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார். நாளை முதல் பொங்கல் பரிசுகள் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட உள்ளது. மேலும் பொங்கலுக்குள் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வரும் 31ம் தேதிக்குள் பொங்கல் சிறப்பு தொகுப்பினை அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.நியாய விலைக்கடைகளில் அதிக கூட்டம் ஏற்படுவதை தவிர்க்க, பொங்கல் சிறப்பு தொகுப்பை நியாயவிலைக்கடை, கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post