கடலூரில் உள்ள வெள்ளி கடற்கரையில் நடைபெறும் சுத்தம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வம் பார்வையிட்டார்.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறை நாட்களில் மக்கள் வரவு அதிகளவில் உள்ளதால் குப்பைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் கடலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி துவங்கியது. இப்பணியினை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பார்வையிட்டார்.
விளையாட்டுத் தளங்கள், படகு தளம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். தூய்மைப்படுத்தும் பணியில் மாவட்ட சார் ஆட்சியர் சரயூ, சுகாதார பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post