குடிமராமத்து பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை அருகே, ஏரி, குளங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டார்.

நீர்வளத்தை பாதுகாக்க தமிழகம் முழுவதும், ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்டவை தூர் வாரும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கீரனூர் குளம், ஜமீன் கூடலூர் குளம், கொளத்தூர் ஏரி உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டார். அப்போது அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த குடிமராமத்து பணிகளால் நல்ல பயன் கிடைத்துள்ளதாக, விவசாயிகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version