திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் கடந்த 6-ம் தேதி ஆனித் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை இரவு வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 8-வது நாளான சனிக்கிழமையன்று காலை சுவாமி நடராஜ பெருமாள் வெள்ளை சாத்தியிலிருந்து எழுந்தருளினார்.
தொடர்ந்து சுவாமி நடராஜ பெருமாள் பச்சை சாத்தி வீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிறன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்றன அதிகாலை ஒரு மணிக்கு விநாயகர் தேரோட்டமும் அதிகாலை 3 மணிக்கு சுப்ரமணியர் தேரோட்டமும் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு நெல்லையப்பர் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
Discussion about this post