பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் தங்களுடைய பதவிக் காலம் முடிந்த பின்னரும் தேர்தல் தொடர்பான பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளனர். வாக்களிக்கத் தகுதியானவர்கள் பட்டியலில் இருந்து 44 உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பாண்டவர் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த நிலையில் பதிவாளர் சங்கம் தேர்தலுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வரும் 23ம் தேதி நடைபெற இருந்த நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post