அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களில் 87 சதவீதம் பேருக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டதை அடுத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு மாதம்தோறும் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு ஆகியவை சத்துணவு பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுவரை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 32 லட்சத்து 12 ஆயிரத்து 756 மாணவர்களில், 30 லட்சத்து 26 ஆயிரத்து 689 மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post