நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுத் தூர்வாரப்பட்டதால் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீநெடுஞ்சேரியில் ஆக்கிரமிப்பை அகற்றிக் கால்வாயைத் தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. பின்னர், ஓரிரு நாட்களில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றித் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்தால் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கால்வாய் தூர்வாரும் பணியை உடனடியாகத் தொடங்கிய தமிழக அரசுக்கும், இது தொடர்பாகச் செய்தி வெளியிட்டு அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்ற நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post