திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் வீட்டில் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இதை எதிர்த்து செந்தில் பாலாஜி செய்த முறையீட்டு மனுவை உயர்நீதி மன்றம் ஏற்க மறுத்துள்ளது.
திமுக எம்.எல்.ஏவான செந்தில் பாலாஜி முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இந்த புகாரின் அடைப்படையில், விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் வீட்டை சோதனையிட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், குற்றப்பிரிவு காவல்துறையினர் வீட்டை சோதனையிடுவதற்கு தடை விதிக்க கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்க மறுத்த உயர்நீதி மன்றம், குற்றப்பிரிவு காவல்துறையினரின் விசாரணைக்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post