சர்ச்சைக்குரிய படக்காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் திரைப்படம் பிற்பகல் முதல் ஒளிபரப்பப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .
அதிமுக அரசை விமர்சிக்கும் சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அதிமுகவினர் தெரிவித்திருந்தனர். திரையரங்குகளின் முன்பு தங்களின் எதிர்ப்பையும் அவர்கள் பதிவு செய்ததால் 2-வது நாளாக இன்றும் சர்கார் படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதிமுகவின் கோரிக்கை ஏற்று சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து தணிக்கை குழு அதிகாரி லீலா மீனாட்சி தலைமையில் சர்கார் படம் மறு தணிக்கை செய்யப்பட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. படத்தில் வரும் கோமளவல்லி என்ற பெயரும் மியூட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது. தணிக்கை பணிகள் நிறைவடைந்து விட்டதால், சர்கார் படம் மீண்டும் திரையிடப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post