அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் ஈடுபட்ட 37 தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளில் விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, விடைத்தாள் முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், செமஸ்டர் தேர்வு விடைத்தாள் முறைகேடு நடைபெற்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு கூட்டத்தின் ஆலோசனை கூட்டம் துணைவேந்தர் சூரப்பா தலைமையில் நடைபெற்றது. அப்போது, சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 7 மண்டலங்களை சேர்ந்த தற்காலிகப் பணியாளர்கள் 37 பேரை பணி நீக்கம் செய்து பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் குமார் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post