கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கடும் வெயிலின் காரணமாக வெற்றிலையில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, திருக்காம்புலியூர், மகா தானபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் வெற்றிலை விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், விற்பனைக்காக வெற்றிலை அனுப்பி வைக்க படுகிறது. கடும் வெயிலின் காரணமாக செவட்டை நோய் தாக்குவதால், வெற்றிலை விவசாயத்தை காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post