புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசிக்க அனைத்து மாநில பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்தியில் மீண்டும் அமைந்துள்ள பாஜக அரசு, அண்மையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தநிலையில், பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே, புதிய கல்விக் கொள்கை வரைவு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்தநிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசிக்க அனைத்து மாநில பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வரும் 22ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து மாற்றுக் கருத்து இருந்தால், மாநில அமைச்சர்கள் ஆலோசனை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post