பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, எதிர்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடந்து வருகிறது.
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதில் பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இதற்கு ஆளுங்கட்சி, எதிர்கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டம் டெல்லியில், நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் மேற்குவங்க முதலமைச்சர், மம்தா பான்ர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த கூட்டத்தின் போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், தற்போது, புல்வாமா தாக்குதல் மற்றும் ராணுவத்தின் பதில் தாக்குதல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post