மின்சார விபத்துக்களை தடுக்க, மின் விபத்து தடுப்பு கண்காணிப்பு கருவியை தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் ஆராய்ச்சியாளர் ஹரிராம் சந்தர் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மழை, புயல் பேரிடர் காலத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து விபத்துக்கள் நேரிடுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறினார்.
இதனை தடுக்கும் விதத்தில், மின்சார தடுப்பு கண்காணிப்பு கருவியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார். மின்சார கம்பி அருந்து விழுந்த உடனே, மின்சாரம் தானாக துண்டித்து விடும் வகையில் இந்த கருவி உருவாக்கப் பட்டுள்ளதாக கூறினார்.
Discussion about this post