பிளாஸ்டிக்கை தின்னும் அரியவகை புழுக்கள் கண்டுபிடிப்பு..

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கு புதிய வழிகள் கண்டுபிடித்தாலும், ஏற்கனவே நாம் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் நம் சுற்றுச்சூழலை மாசுபட செய்கிறது.எனவே, பிளாஸ்டிக் உன்னும் அரிய வகை புழுக்களை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.இதன் மூலம் நம் சுற்றுச்சூழல் சிறதளவு பாதுகாக்கப்படலாம் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

நாம் அன்றாட பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் 9% பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.மேலும் 12 % பிளாஸ்டிக் எரிக்கப்படுகிறது.மீதமுள்ள 79 % பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலிலே கலந்துவிடுகிறது.ஓராண்டுக்கு சராசரியாக 12.7 மில்லியன் பிளாஸ்டிக் கடல்களில் கலக்கிறது என ஆய்வுகள் கூறுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பொழுது,பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியாது.இதற்கான ஒரே தீர்வு நாம் அன்றாட பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது தான்.விஞ்ஞானிகள் சிலர் இதற்கான தீர்வை கண்டுபிடிக்கும் வகையில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

பிளாஸ்டிக் பைகளில் புழுக்களை வைத்துவிட்டு 40 நிமடங்கள் கழித்து பார்த்தில் புழுக்களானது பைகளில் ஓட்டையை உருவாக்கி உள்ளன என்பதையும், பிளாஸ்டிக்கின் அளவு 92 கிராம் குறைந்துள்ளது எனவும் கண்டுபிடித்துள்ளனர். இந்த புழுக்களின் உடம்பில் பிளாஸ்டிக்கை ஜீரணிக்க கூடிய நொதிகள்( enzyme) இயற்கையாக உள்ளது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வானது முழுமையாக முடிந்த பின், பிளாஸ்டிக் மாசுபாடு அதிமாக உள்ள பகுதிகளில் இந்த புழுக்களை விடுவது மூலம் பூமியானது சுத்தமாகும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்  கூறுகின்றனர்.

Exit mobile version