கிருஷ்ணகிரி அருகே, புதிய கற்கால மற்றும் பெருங்கற்கால தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, குட்டூர் கிராமத்தில் கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் மற்றும் அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன், ஆய்வு மாணவர்களுடன் இணைந்து புதிய கற்கால, பெருங்கற்கால தொல்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவிலேயே மிகப்பெரிய உருக்காலை செயல்பட்ட இடமாக, குட்டூர் இருந்தது என்பதை ஏற்கனவே அகழ்வாய்வில் அறியப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தொல்பொருட்கள், புதிய கற்கால பண்பாட்டின் தொடர்ச்சியாக, மக்கள் நேரடியாக பெருங்கற்காலத்துக்கு வந்துள்ள நிலையை வெளிக்காட்டுவதாக அருங்காட்சியகம் காப்பாளர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
Discussion about this post