3 கோடி போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல் தெரிவித்துள்ளார்.
பீஹார் மாநிலம் பாட்னாவில் மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் ஜூன் மாதத்துக்குள் நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறியுள்ளார். இதுவரை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் உள்பட 16 மாநிலங்களில் 3 கட்டங்களாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு மானியமாக ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாகவும், தெரிவித்துள்ளார். 81 கோடி பயனாளிகள் உள்ள நிலையில், 610 லட்சம் டன் உணவு தானியங்கள் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 3 கோடி போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் கூறியுள்ளார்.
Discussion about this post