வன்முறை சம்பவங்கள் காரணமாக, ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் சில பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நிக்கியதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை சமாளிக்க 144 தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. நிலைமை கட்டுக்குள் வர தொடங்கியதை அடுத்து காஷ்மீரின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இதனையடுத்து சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அறங்கேறியதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் சில குறிப்பிட்ட பகுதிகளில் நேற்று மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஜம்மு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட சுமார் 300 பயணிகள் நேற்று ஸ்ரீநகருக்கு விமானங்களில் திரும்பினர். ஹஜ் பயணிகள் அவரவர் இருப்பிடங்களுக்கு பத்திரமாக சென்றடைய, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Discussion about this post