கர்நாடகாவில் பெய்து வரும் கனத்த மழையால், காவிரியில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 75 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால், தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கையாக அணையின், 16 கண் மதகு கரையோரமுள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுப்பட்டுள்ளது. அதிக நீர்வரத்தால் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
Discussion about this post