நடப்பு நிதியாண்டில் நாட்டின் நேரடி வரி வருவாய், 8 லட்சத்து 74 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, செலுத்தப்பட்ட வரியில், பிடித்தம் போக, திரும்ப அளிக்கப்பட்ட தொகை, 17 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, நிகர வரி வசூல், 13 புள்ளி 6 சதவீதம் உயர்ந்து, 7 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு 2018-19ஆம் நிதியாண்டின், நேரடி வரி வசூல் இலக்கான, 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயில், 64 புள்ளி 7 சதவீதமாகும்.
கடந்த நிதியாண்டில், தானாக முன்வந்து வருவாயை அறிவிக்கும் திட்டத்தில், 10 ஆயிரத்து, 844 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post