ஊழலுக்காக ஒரு ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்றால் அது கருணாநிதி ஆட்சிதான் என்றும் காங்கிரஸும் திமுகவும் சேர்ந்து 2ஜி ஊழலை செய்தார்கள் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்தார்.
திண்டுக்கலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாணக்கியத்தனத்துடன் செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார்.